முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி இன்று மதியம் 12.00 மணியளவில் வவுனியாவை சென்றடைந்தது.

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து பவனியை ஆரம்பித்த ஊர்தி யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மாங்குளம் , ஓமந்தையூடாக வவுனியா நகரை வந்தடைந்தது.

இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைந்து மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக மல்லாவி மாங்குளம் ஒட்டுசுட்டான் ஊடாக நாளைய தினம் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய இருக்கின்றது.

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(Visited 42 times, 1 visits today)