வெளிநாடு செல்லும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு, 3 மணித்தியாலத்திற்கு முன்னதாக விமானநிலையத்திற்கு வருகை தருமாறு ஸ்ரீலங்கா விமானசேவை அறிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அடுத்த அறிவிப்பு வரையில் இந்நிலை தொடரும் என ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் சட்டப்படி பணியில் ஈடுபட்டிருப்பதனால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா விமான சேவைகள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)