2008ம் ஆண்டில் 11 நபர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் பெயர் குறிப்பிடப்பட்ட கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்சியை (நேவி சம்பத்) கைது செய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக பிடியாணை பிறப்பிக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த பிடியாணை தொடர்பிலான சிவப்பு அறிவித்தல் ஆங்கில மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படை புலனாய்வு உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் உள்ளதோடு, எதிர்வரும் 31ம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5

(Visited 15 times, 1 visits today)