அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இறுதியாக கூடியிருந்தது.

பிரதமரின் தலைமையிலான குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அரசியலமைப்பு பேரவையின் ஆதரவுடன் நியமிக்கபட்டது.

21 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன் அது தொடர்பிலான விவாதம் 5 நாட்கள் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதா என்பது தொடர்பில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயலாளர் காரியாலயத்தின் மேலதிக செயலாளர் அரச சட்டத்தரணி யுரேஷா பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)