வட மாகாண சபையைச் சேர்ந்தவர்கள் நடைபாதை அரசியல்வாதிகள் போன்று மாறிவிட்டார்கள் என  அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க  தகவல் திணைக்களத்தில்   நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கில் இன அழிப்பு தினமாக மே 18 ஆம் திகதியை அனுஷ்டிக்க வடமாகாண சபையில் உள்ளவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளின் போது பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்   மேலும் தெரிவிக்கையில்,

வட  மாகாண சபை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது மிகவும் செயற்திறனற்றுப் போயுள்ளது. இப்போது தெற்கில் உள்ள  நடைபாதை அரசியல்வாதிகள் போன்று இன விவகாரத்தை கையிலெடுத்து அடுத்த தேர்தலில் தமது பதவிகளை பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் இதனைச் செய்கின்றார்கள்.

எந்தவொரு அரசியல்வாதியும் வங்குரோத்து நிலைமைக்கு வரும் போது அதிலிருந்து விடுபட பிரதான ஆயுதமாக இனம் மற்றும் மதங்களை கையில் எடுக்கின்றனர் என தெரிவித்தார்.

(Visited 29 times, 1 visits today)