இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தங்களுடைய நோன்பை வெள்ளிக்கிழமை(18) முதல் ஆரம்பிக்கவுள்ளனர் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.

இதேவேளை, அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கென, புனித றமழான் நோன்பு காலத்தில் விஷேட கடமை நேர சுற்றறிக்கையை அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.

தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் இன்று(17) முதல் ஜூன் மாதம் 16ஆம் திகதி வரைக்கும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறும் அந்த அறிவித்தலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)