அனைத்து இலங்கையர்களுக்கும் முன்னேற்றம் என்ற அதன் நோக்கத்தின் அடிப்படையில், ஹற்றன் நெஷனல் வங்கியின் இஸ்லாமிய வங்கிப் பிரிவான அல்நஜாஹ், மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட்( Habitat for Humanity Sri Lanka (HFHSL)) அமைப்புடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டுக்கான ‘Drops of Life’ திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘Drops of Life’ திட்டமானது ஐ.நா பேண்தகைமை அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்து பின்தங்கிய மற்றும் வறிய சமூகத்தினருக்கு மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட் அமைப்பின் விரிவான நிபுணத்துவத்துடன் சுத்தமான குடிநீர், சுத்திகரிப்பு மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட் அமைப்புடனான குறிப்பிடத்தக்க இந்த புதிய கூட்டிணைவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த HNB இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி டில்ஷான் ரொட்ரிகோ, ‘HNB ஆனது இலங்கை மக்களின் வாழ்க்கையில் சகல துறைகளிலும் ஒரு பங்காளியாக சேவை செய்வதைக் கருத்திற்கொண்டுள்ள ஒரு வங்கி என்பதோடு, மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட் அமைப்புடனான கூட்டிணைவு எங்கள் பயணத்தின் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகும்.

எனவே மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட் அமைப்புடன் நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்தப் பங்காண்மை எமக்கு மிகப்பெரும் திருப்தியை அளிக்கிறது.

இலங்கையில் கவனிக்கப்படாதிருக்கும் கிராமப்புற சமூகங்களுக்காக நேர்த்தியான மற்றும் பாதுகாப்பான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான தமது பணியின் ஒரு பகுதியாக அவர்கள் மேற்கொண்டிருக்கும் இந்த வேலை இலங்கையர்களுக்கு நிலையானதொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது.

ஐக்கிய நாடுகளின் பேண்தகைமை அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்து மதிப்புமிக்க இந்த உறவைக் கட்டியெழுப்பி மேலும் முன்னோக்கிச் செல்ல நாம் எதிர்பார்த்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பில் காத்தான்குடியிலுள்ள அமீர் அலி வித்தியாலயம் ஆரம்பப் பாடசாலைக்கு 3 மலசலக்கூடங்களை அமைப்பதற்கும் காத்தான்குடி பிரதேச சபையில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 50 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 500 லீற்றர் கொள்ளளவுடைய 50 நீர்த்தாங்கிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக HNB அல்நஜாஹ் 1 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவுள்ளதுடன், நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த முயற்சி முழுமையடைவதற்காக தமது நேரத்தையும் அயராத உழைப்பையும் வழங்கவுள்ளனர்.

மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட் அமைப்பின் தேசியப் பணிப்பாளர் யூ ஹவா லீ, ‘‘Drops of Life’ திட்டத்திற்கான HNB இன் ஆர்வம்மிக்க இந்தப் பங்களிப்பு தொடர்பில் தமது நன்றிகளைத் தெரிவித்ததோடு, ‘இந்த முக்கியமான திட்டத்திற்காக எங்களுக்கு ஆதரவளித்திருக்கும் HNB க்கும், அதன் இஸ்லாமிய வங்கிக் குழுவினருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். மனிதநேய இலங்கைக்கான ஹபிடாட் அமைப்பு இலங்கையில் கடந்த 23 வருடங்களாக இயங்கி வருகிறது.

இந்த காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள சமூகத்தினருக்காக வீடுகளை நாம் கட்டிக்கொடுத்துள்ளதோடு, களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். அதேபோல HNB அல்நஜாஹ் போன்ற கூட்டுறவு நிறுவனங்களின் நன்கொடைகளையும் நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.

ஏNஆ இஸ்லாமிய வங்கிப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஹிஸாம் அலி கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கை அதன் அபிவிருத்தியில் கணிசமானளவு முன்னேற்றத்தைக் கண்டுவரும் போதிலும், இன்னும் அதில் குறிப்பிடத்தக்க சில இடைவெளிகள் காணப்படுவதால், எங்களது குடிமக்களுக்காக அதனை பூர்த்திசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.

கிராமப்புற சமூகத்தினர் மத்தியில் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக போதியளவு தண்ணீர், சுத்திகரிப்பு, கல்வி மற்றும் வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தல், அவற்றுள் கவனத்திற்கொள்ளப்படவேண்டிய சில உடனடித் தேவைகளாக இருக்கின்றன’ என்று குறிப்பிட்டார்.

(Visited 12 times, 1 visits today)