இலங்கை மத்திய வங்கியானது தங்க இறக்குமதியில் 15% வரியை சுமத்தியதானது உண்மையில் வெளிநாட்ட நாணய பரிமாற்றங்கள் நாட்டை விட்டு வெளியே செல்வதை தடுப்பதில் உதவி செய்யும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநரான டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் நாணயக் கொள்ளை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் முதல் இரு மாதங்களின் போது தங்க மற்றும் வாகன இறக்குமதிகள் கடுமையாக அதிகரித்ததுடன் இதன் காரணமாக நாம் இதனை தடுப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தங்க இறக்குமதிகள் மீது 15% வரியினை சுமத்துவதற்கு தீர்மானித்தோம். இது பொருளாதாரத்தின் நிதியியல் நிலைமைக்கு சிறிது நிவாரணத்தை அளிப்பதாக அமைந்த்து எனவும் தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தங்க இறக்குமதி பதவு செய்யப்பட்டது.ஆனால் போதிய தங்க ஏற்றுமதிகள் காணப்படவில்லை. எனவே எந்தவித வெளிநாட்டு நாணய பரிமாற்றமும் இதுவரை தடுப்பதற்கு 15% வரிச்சுமையø தங்க இறக்குமதி மீது சுமத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அடுத்து இலங்கை மத்திய வங்கியானது சமுர்த்தி வங்கியை பொறுப்பெடுக்க வில்லை. ஆயினும் அதன் நிலையை பலபடுத்தும் முகமாக அதன் பெறுபேறுகளை மேம்படுவதற்கு உதவி செய்யும்.

இதன் காரணமாக புதிய குழாவினது இவ்விவகாரத்தை கவனிப்பதற்கு நியமிக்கப்படவுள்ளது. இவ்விவகாரம் தற்போது முகாமைத்துவ குழுவினால் ம’ள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திவி நெகும சட்ட வாக்கத்தின் இக்குழுவானது நியமிக்கப்படவுள்ளது என்றார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் மத்திய வங்கியானது கொள்கை வீதங்களை மாற்றமடையாமல் பேணி வருகிறது. நாணய வீக்கமானது தொடர்ந்தும் ஒற்றை இலக்க மட்டத்தில் பேணப்பட்டு வருகிறது. எரிப்பொருள் மற்றும் எரிவாயுவில் தற்காலிகமாக விலை உயர்வும் உணவுப் பொருட்களில் தொடர்ச்சியாக விலை சரிவும் ஏற்பட்டு வரும் நிலையில் இந்நிலை இவ்வாறு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் உள்நாட்டு பெற்றோலிய உற்பத்திகள் எரிவாயு மற்றும் பால் மாவு ஆகியவற்றில் விலைகள் மறு சீரமைக்கப்பட்டமைகாரணமாக நாணய வீக்கத்தில் தற்காலிக ÷உயர்வானது எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் நாணய வீக்கமானது 2 ஆவது அரையாண்டில் இடைநிலை இலக்கத்தில் பேணப்படும்.

நுகர்வோர் விலைகள் கடந்து டிசம்பர் மாதத்தில் 7.1% ஆக இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 3.8% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளன என்றார்.

(Visited 26 times, 1 visits today)