பாலியல் குற்றங்கள் உலகளாவில் அதிகரித்துள்ளன. ஹாலிவுட் படங்களிலும் இந்திய திரையுலகிலும் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள். பாலியல் வன்மங்களுக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் பாதகங்களும் நடக்கின்றன.

இதற்கு எதிரான குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் ‘மீடூ’ இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டத்துக்கு பிறகு திரையுலக பெண்களை பாதுகாக்க புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் பூட்டப்பட்ட கூண்டுக்குள் இருந்தபடி நூதன போராட்டம் நடத்தினார்.

‘12 மணிநேரமாக நான் சிறை வைக்கப்பட்டு உள்ளேன். பெண்ணை சுதந்திரமாக வாழ விடுங்கள்’ என்று கோஷம் எழுப்பியபடி இந்த போராட்டத்தை நடத்தினார். இது பட விழாவுக்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.

(Visited 37 times, 1 visits today)