ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 142 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

துரதிருஷ்டவசமாக நாங்கள் 142 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டோம். 170 முதல் 180 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். இன்னும் எங்களுக்கு பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் அடைய வேண்டும்.

எங்களது கடைசி போட்டி சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் நடக்கிறது. அந்த ஆடுகளம் பற்றி நன்கு அறிவோம். எங்களது அணியில் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோர்க் சொந்த நாட்டு அணிக்கு திரும்புவதால் அவர்களை தவறவிடுகிறோம். அவர்கள் எவ்வளவு அபாயகரமான வீரர்கள் என்பதை அறிவோம். அதேவேலையில் பட்லர் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்.

 

(Visited 17 times, 1 visits today)