இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஒரு நாளில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஜக்கிய நாடுகள் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த ஜஸ்மின் சூக்கா சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ளாா்.

இச் சந்திப்பு இணையத்தள வழியாக நடாத்தப்பட்டதுடன் இறுதி யுத்தத் தின் இறுதி நாளாகிய மே 18 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக பதிவாகிய 280பேரின் உறவினர்களே இவ்வாறு சந்திப்பினை முன்னெடுத் துள்ளனா்.

நேற்று நண்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது குறித்த தினத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் ஜஸ் மின் சூக்காவுடன் ஸ்கைப் மூலம் உரையாடியிருந்தனர். அன்றைய நாளின் தமது உறவினர்கள் இராணுவத்தால் எவ்வாறு கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது தொடர்பாக உறவினர்கள் சூக்காவுக்கு எடுத் துரைத்துள்ளனா்.

இதேவேளை அன்றைய நாளில் காணாமல் போன 280 பேரின் பெயர்களும் ITJP இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ITJP என்பது ஒரே நாளில் இலங் கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களைப் பட்டியலிடும் புதிய இணை யதளம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 44 times, 1 visits today)