வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதனைத்தடுத்து நிறுத்துமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்ககைதிகளை வவுனியா சிறைச்சாலையில் வைத்திருக்குமாறு கோரியே இன்று காலை உணவு தவிர்ப்புப் போராட்டத்ததை மேற்கொண்டனர்.

வவுனியா மாவட்ட கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளும் இன்று காலை உணவைப் பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை இணைந்து மேற்கொண் ததாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 19 times, 1 visits today)