நாளை நள்ளிரவிலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கு 20 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென்ற தமது கோரிக்கைக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்காததால், இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையின்படி, பஸ் கட்டணத்தை 6.56 சதவீதத்தால் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது காணப்படும் கட்டணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது, என அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்தார்.

(Visited 37 times, 1 visits today)