ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் சிறப்பு ஆணை விருதானது ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிகவும் மதிப்புமிக்க மற்றும் அரிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு இனங்காணல் அங்கீகாரமாகும். ரஞ்சித் பண்டிதகே Diesel & Motor Engineering PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்) அண்மையில் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

1951 ஆம் ஆண்டில் அப்போதைய கூட்டாட்சி அதிபரான தியோடர் ஹியுஸ் ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் சிறப்பு ஆணைவிருது அறிமுகப்படுத்தப்பட்டது.

அனைத்து துறைகளிலும் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்காக கிடைக்கப்பெறும் ஒரேயொரு கௌரவமாக இது அமைந்துள்ளதுடன், தேசத்திற்கு தமது சேவைகளை ஆற்றியுள்ளதனிநபர்களுக்கு ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசால் வழங்கப்படும் அதியுச்ச கௌரவமாகவும் இது அமைந்துள்ளது.

சிறப்பு ஆணை விருதுக்கான நபர்களை தேர்ந்தெடுக்கும் போதுபொதுவாக சமூகத்திற்கு நற்பயனை ஏற்படுத்தும் வகையில் சாதனைகளை நிலைநாட்டியவர்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் அதிபர் விரும்புகின்றார்.

சமூக, தொண்டு அல்லது அறப்பணித் துறைகளில் தேசத்தில்அனைத்து வகைகளிலும் மிகச் சிறந்த சேவைகளை ஆற்றி அரசியல், பொருளாதாரம் அல்லது அறிவுசார் சாம்ராஜ்யத்தில் சாதனைகளை நிகழ்த்திய ஜேர்மனியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு ஆணை விருது வழங்கப்பட்டு வருகின்றது.

பண்டிதகேயின் குடும்பத்தினர், அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் முன்னிலையில் மேன்மை தங்கிய ஜோன் ரோட் சிறப்பு ஆணை விருதை வழங்கியிருந்தார். இந்த கௌரவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பண்டிதகே தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணத்தையும் தூதுவர் குறிப்பிட்டார்.

மிகவும் மதிக்கப்படுகின்ற ஒரு வர்த்தகப் பிரமுகராவும் ,மிகச் சிறந்த மனிதராகவும் திகழும் பண்டிதகே மீது ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு வைத்துள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் இது காண்பிக்கின்றது. நிகழ்வில் உரையாற்றும் போது ஒரு பொறியியல் மாணவனாகவும் ,வர்த்தகராகவும் ஜேர்மனியுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பினை நினைவுகூர்ந்தார்.

தனிநபர்கள் தொடர்பில் மிகவும் கவனமான பரிசீலனையின் பின்னர் இவ்விருது வழங்கப்படுவதுடன், இத்தகைய ஒரு விருதைப் பெற்றுக்கொள்வது பண்டிதகே வழிநடத்தும் நிறுவனத்திற்கும் கிடைக்கப்பெற்ற ஒரு சாதனையை தனிநபருக்கான இந்த விருது சான்று பகருகின்றது.

DIMO நிறுவனத்தின் நிறுவன ஆட்சி முறை, தொழில்தர்ம வர்த்தக நடைமுறைகள்,வெளிப்படை மற்றும் நிலைபேண்தகைமை முயற்சிகள் ஆகியனவும் இதன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள. இந்த அரிய கௌரவமானது உண்மையில் DIMO நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள கௌரவமாகும்.

மிகச் சிறப்பாக பொறியியல் வடிவமைக்கப்பட்ட ஜேர்மன் வர்த்தகநாமங்களை 1939 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பிரதிநிதித்துவம்செய்து வந்துள்ளதையிட்டு DIMO மிகுந்த பெருமை கொள்கின்றது.

Blaupunkt , Bomay Class, Demsg, Detroit Diesel ,Drager , Dremel, Fischer, Kaeser,KSB, Mercedes – Benz,Meditron, MTU, Osram ,RZB,Stchafer,Schwing Setter, Siemens,Still, hyssenkrupp,vossloh, Schnable மற்றும் zeiss அடங்கலாக 25 இற்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த ஜேர்மன் வர்த்தக நாமங்களை DIMO பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது.

(Visited 21 times, 1 visits today)