வரையறுக்கப்பட்ட அசோசியேட்ஸ் தனியார் நிறுவனம் புத்தம் புதிய NISSAN URVAN NV350 வாகனத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் தொழில்நுட்பத்திலான மனங்கவர் தோற்றத்தைக் கொண்ட இவ்வாகனமானது பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் பெரும் பிரபல்யமடைந்து விளங்குகிறது. இவ்வாகனம் எமது நாட்டில் அம்புலன்ஸ் சேவைக்கும் பாவிக்குமளவுக்கு சொகுசானதும் இட வசதிமிக்கதும் பாதுகாப்பானதுமான வாகனமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டான்டர்ட் ரூப், ஹய் ரூப் மற்றும் அதிக அகலத்தைக் கொண்ட 16 ஆசன ஹய் ரூப் ஆகிய மூன்று வடிவங்களிலான இவ் வாகனத்தை ஆறு ஆசனங்கள் , 15 ஆசனங்கள் போன்ற வடிவங்களிலும் கொள்வனவு
செய்யலாம்.

பொதுவாக இவ்வாறான வாகனங்களின் சேவை நடவடிக்கைகள் 5000 கி.மீ களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டுமென்ற போதிலும் இவ் வாகனத்தை பொறுத்த வரைக்கும் 7,500 கி.மீ களுக்கு ஒரு முறை அதனை மேற்கொண்டாலே போதுமானது. அதுவும் இவ்வாகனங்களின் ஒரு சிறப்பம்சமாகும். ஆகவே , சகல 15,000 கி.மீ வரைக்கும் ஒரு சேவை நடவடிக்கைக்கு செலவாகும் சுமார் 30,000 முதல் 40,000 வரையான தொகையை சேமிக்க முடியும் .இவ்வாகனத்துக்கு மிகவும் வலுவானதும் 129 குதிரை வலுவினைத்திறன் வலுவானதுமான NISSAN YD 25 ரக எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

NISSAN URVAN NV350 வாகனத்தை ரூ 86 இலட்சத்திலிருந்து 91 இலட்சத்து ஐம்பதாயிரம் வரையான தொகைக்கு கொள்வனவு செய்யலாம். இலகு தவணை திட்டங்கள் மற்றும் நிதி வசதிகள் வரையறுக்கப்பட்ட AMW கெப்பிட்டல் லீசிங் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது இதர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் வழங்குவதற்கு AMW நிறுவனம் தயாராக உள்ளது.

இவ்வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஐப்பான் நாட்டின் NISSAN நிறுவனத்திடமிருந்து 10,000 கி.மீ அல்லது 03 ஆண்டு கால பூரண உத்தரவாதச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு நாடெங்கிலுமுள்ள அMஙி முகவர்களை தொடர்பு கொண்டு 24 மணித்தியாலங்களாக இயங்கும் அனர்த்த சேவையினை 15 முதல் 30 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும், அசல் NISSAN உதிரிப்பாகங்கள் முகவர்களிடமிருந்து எந்தவொரு உதிரிப்பாகத்தையும் சலுகை விலையில் கொள்வனவு செய்வதற்கு AMW சேவைகள் வலையமைப்பின் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.

(Visited 48 times, 1 visits today)