ஆடைத் தொழிற்றுறை வழங்குனர்கள் கண்காட்சி (AISEX) , துணி வகை மற்றும் சாதனங்கள் வழங்குனர்கள் கண்காட்சி (FASE) ஆகியன அண்மையில் BMICH மண்டபத்திலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மையத்தில் இடம்பெற்றது. 1998 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு தடவை இடம்பெற்று வருகின்ற AISEX & FASE   2018 இம்முறை 8 ஆவது தடவையாக இடம்பெற்றதுடன், தொழிற்றுறையின் அபிவிருத்தி மீது கவனம் செலுத்தியுள்ள அதனுடன் தொடர்புபட்ட அனைத்து பெரிய மற்றும் சிறிய தொழிற்பாட்டாளர்களை இந்நிகழ்வு ஒன்றிணைத்தது.

ஆடைத் தொழிற்றுறையின் பிரதான இயந்திர தளபாட வழங்குனர்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் இக்கண்காட்சி நிகழ்வில் பங்குபற்றினர். இலங்கையில் கிடைக்கப்பெறுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பார்வையாளர்கள் நேரடியாகக் கண்டு அனுபவங்களைக் கற்றுக்கொள்வதுடன், தொழிற்றுறையில் செயற்படுகின்ற முக்கிய ஆளணியினரைச் சந்தித்து தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

இம்முறை மாநாட்டின் போது முதற்தடவையாக BMICH இல் இடம்பெற்ற கண்காட்சிக்கு சமாந்தரமாக “தெற்காசிய பிராந்தியத்தில் போட்டியிடுகின்ற உள்ளூர் வர்த்தக நாமங்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு உதவுதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் மாநாடு ஒன்றும் இடம்பெற்றது. நவீன துணி வகை , சாதனங்கள் , ஆடைத் தொழிற்றுறை தொடர்புபட்ட அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியன தொடர்பில் இம்மாநாடு அமர்வுகளின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்றுறையின் போக்கினை மாற்றியமைக்கும் இலங்கையின் உச்ச பிரபலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு பேச்சாளர்கள் இம்மாநாட்டின் போது தமது உரைகளையும் படைப்பாக்கங்களையும் நிகழ்த்தினர். இம்மாநாட்டு அமர்வுகளின் ஊடாக அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் , வடிவமைப்பாளர்கள் , புத்தாக்குனர்கள் மற்றும் போக்கினை மாற்றுபவர்கள் ஊக்குவிக்கப்பட்டு தொழிற்றுறையின் எதிர்காலம் தொடர்பில் தொழிற்றுறையின் தற்போதைய தலைவர்களின் இலட்சியங்களும் ஊக்குவிக்கப்பட்டது.

Sri Lanka Apprel Insititute(SLAI) மற்றும் Lanka Exhibition & Conference Services ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு Joint Apparel Association Forum, , கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு , தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை இடம்பெறும் இந்நிகழ்வினை தொழிற்றுறையின் தளமேடையாகவும் ஆதரவளிக்கும் ஒன்றாகவும் மாற்றியமைக்கும் இலட்சியத்துடன் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

(Visited 18 times, 1 visits today)