கொழும்பு நகரம்

கொழும்பு நகரில் வாழும் வதிவிட வசதிகள் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கொள்கை திட்டத்துக்கு ஏற்ப கொழும்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ள 1500 தோட்டக்குடியிருப்புகளில் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்த குடும்பங்களை சேர்ந்த 68000 க்கு மேற்பட்ட மக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தும் நகர புனர்வாழ்வு திட்டத்தின் கீழ் நவீன வசதிகள் கொண்ட மாடிக்கட்டடி குடியிருப்புகளில் குடியேற்றுகின்றனர்.

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நகர அபிவிருத்தி திட்டங்களுக்கும் குறைந்த வசதி கொண்ட இந்த மக்கள் குடியிருப்புகள் பெரும் பிரச்சினையாக காணப்பட்டுள்ளன. இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் அவர்களால் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அரசுக்குரிய காணிகளை விடுவித்து அபிவிருத்திக்காக பயன்படுத்தும்
நோக்கத்துடன் முதலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நகர புனர் வாழ்வு திட்டம் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கேற்ப குறித்த இத்திட்டம் மூலம் விடுவிக்கப்பட்ட 900 ஏக்கர் நிலப்பரப்பில் 300 ஏக்கரில் புதிய வீடமைப்புத் திட்டத்தை தீர்மானிப்பதற்கும் 150 ஏக்கரில் பொது மற்றும் களியாட்ட செயற்பாடுகளுக்காக ஒதுக்குவதற்கும் மீதியான 450 ஏக்கரை அரசாங்க கலப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறைந்த வசதிகள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காக நவீன வசதிகள் கொண்ட வீடுகளை நிர்மாணித்து ஏனைய அடிப்படை வசதிகளுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் விடுவிக்கப்படும் காணிகளை அபிவிருத்தி நடவடிக்கைகளை பயன்படுத்துவதுமே இத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

2013 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட 15 திட்டங்களில் 6957 க்கு மேற்பட்ட மக்கள் குடியேற்றப்படவுள்ளனர்.

வீடமைப்புத்திட்டம்  நிலையம் வீடுகளின் எண்ணிக்கை  வழங்கப்பட்ட திகதி

மிகிந்துசென்புர தெமட்டகொட 500 2013
புரதொரசெவனை ஒறுகொடவத்த 34 2014
சிறிசரஉயன பொரளை 718 2014
மெத்சர உயன பொரளை 430 2014
சிறிசரந்த செவன புளுமென்டல் 366 2014
லக்முத்துசெவன வெள்ளவத்தை 118 2014
றன்திய உயன ஹேனமுல்ல 1137 2014/2016
சிறிமத்து உயன எதிரிசிங்கவத்த 546 2014/2017
முவதொர உயன பர்கியூஷன்வீதி 872 2016
லக்சந்த உயன சாலமுல்ல 1008 2017
சியசெத செவன பிரதியுமாவத 266 2017
‘ஜயமக செவன புளுமென்டல் 68 2017
லக்ஹருசெவன மாளிகாவத்த 192 2017
மெத்சந்த செவன கொழும்பு 15 218 2017
லக்செதசெவன மாளிகாவத்த 480 2017
மொத்தம் 6951

இத்திட்டம் பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஒப்படைக்கப்பட்ட பின் வீடமைப்புத்திட்டங்களின் நிர்மாணப்பணிகள் உடனே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களின் பழைய குடியிருப்புக்கு அருகிலேயே மாடிக்குடியிருப்பு பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் பழைய ஜீவனோபாய மார்க்கங்களை பாடசாலைகள் மற்றும் ஏனைய அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் புதிய வீடுகளைப் பெற்றுத் தருவதற்காக திட்டத்தை வெற்றி கரமாக பூர்த்தி செய்வதற்கு
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கேற்ப அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாடிக்குடியிருப்பு திட்டப் பகுதியில் வளரும் பிள்ளைகளின் கல்வி ,விளையாட்டு ,அழகியல் மற்றும் தலைமைத்துவம் திறமைகளை அபிவிருத்தி செய்து தேசிய மட்டத்தில் உயர்த்துவதற்காகவும் மேலும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பிரஜைகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் நகர புனர்வாழ்வு திட்டம் மூலம் இப்பொழுதே
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மாடிக்குடியிருப்புகளில் குடியேற்றப்படும் குடும்பத்தின் பிள்ளைகளின் பாடசாலைகள் கல்வி மற்றும் சமூக வாழ்க்கை அறிவை உயர்ந்த மட்டத்தில் மேம்படுத்தும் நோக்கத்துடன் நெனகிரிய கல்வி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் தரம் 5 மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் ,ஆங்கிலம் ,கணிதம் , விஞ்ஞானம் தொழிநுட்பப் பாடங்கள் ஓவியம், நடனம் ,சங்கீதம் மற்றும் பாடங்களுக்காக வகுப்புகள் நடத்துதல் க.பொ.த,
( சாதாரண தரம்) க.பொ.த ( உயர்தரம்) மாணவர்களுக்காக கல்வி வழிகாட்டல் பட்டறைகள் நடத்துதல் போன்ற வேலைத்திட்டங்களின் மூலம் ஆளுமை அபிவிருத்தி சிந்தனை மேம்பாடு மற்றும் சிறுவர்களின் திறமையை அபிவிருத்தி செய்தல் ஆகியன இந்த வேலைத்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறே சிறுவர்கள் மற்றும் இளையோரின் திறமைகளை அறிந்து கொள்ளல் அபிவிருத்தி செய்தல் மற்றும் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாயப்புகளை பெற்றுத் தருதல் போன்ற நல்ல ரசனைத்திறனுள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் றித்ம சரிய என்ற பெயரில் அரங்கேற்ற கலைகள் மற்றும் அழகியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பாடல்,வாத்தியம்,நடிப்பு ,ஓவியம் சம்பந்தப்பட்ட பட்டறைகள் நடத்துதல் கலைத்திறமைகளை வெளிகாட்டுவதற்காக வருடாந்தம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் உள்ளார்ந்த திறமையுள்ள கலைஞர்களை உருவாக்குதல் இவ் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை அறிந்து கொள்ளுதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் மூலம் அவர்களை அந்தத் துறைகளில் திறமையுள்ளவர்களாக உருவாக்குதல் மற்றும் சமுகத்தில் உயர்ந்த மட்டத்துக்கு மேம்படுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவம் மற்றும் திட்டமிடல் திறமையை அபிவிருத்தி செய்வதற்காகவும் ஜவயட்ட திரிய என்ற பெயரில் விளையாட்டரங்கு மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டங்கள் இத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறே நகர புனர்வாழ்வுக்கான திட்டத்தின் கீழ் அனைத்து வீட்டுத்திட்டங்களிலும் குடியேற்றுவதற்காக தொழில் உள்ளவர்கள் , தொழில் இல்லாதவர்கள் வகைப்படுத்தி பொருளாதார ரீதியில் சக்தியளிப்பதற்காக திவிசிரிய என்ற பெயரில் சுயதொழில் மற்றும் தொழில் பயிற்சி வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் கீழ் அழகியற்கலை,கையடக்கத்தொலைபேசி திருத்துதல் ,கேக் உற்பத்தி மெழுகுவர்த்தி உற்பத்தி ,கைப்பைகள் உற்பத்தி ஆகிய சுயதொழில் பயிற்சி நெறிகள் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..

மேலும் வீட்டுத் தொகுதியில் முகாமைத்துவ குழுக்கள் அமைத்தல் ,வீட்டுத் தொகுதி அருகில் விளையாட்டரங்குகள் ,வழிபாட்டு மண்டபங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் ஆகியன மூலம் இந்தத்திட்டம் வெற்றிகரமான திட்டமாக வரவேற்பு பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்ட முடியும்.

அதற்கேற்ப பாட்டலி சம்பகிக்க ரணவக்கவின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட தெமட்டகொட சயபத்செவன மாடிக் குடியிருப்புத் திட்டம் 437 வீடுகளை உள்ளடக்கியதுடன் கொழும்பு 7 மெற்ய்லன்ட் பிளேஸ் 55 தோட்டப் பகுதி தற்போது குடியிருப்பு மக்கள் மற்றும் களனி கரையோர புகையிரத மார்க்கம் அகற்றுதல் திட்டம் காரணமாக இடம் பெயர்ந்த குடும்பங்களை அந்த வீடுகளில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் எஞ்சியுள்ள மாடிக்குடியிருப்பு 266 வீடுகளைக் கொண்டதுடன் அதன் நிர்மாணப் பணிகள் இந்த வருடம் ஜூலையில் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

2 படுக்கையறைகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட அந்த வீட்டுப் பகுதி ஒன்றை நிர்மாணித்தல் மற்றும் சேவை வழங்கலுக்கான செலவீடு ரூபா 4 மில்லியனாகும். இந்த மாடிக் கட்டிடங்கள் இரண்டுக்குமான மொத்தச் செலவினம் ரூபா 17840 இலவசமாகும். 15 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டுத்திட்டத்தில் வசிப்பவர்களின் வசதிக்காக மின்விசிறிகள் வழிபாட்டு வேலைத்திட்டம் மற்றும் ஏனைய வசதிகளைக் கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையிலும் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

(Visited 24 times, 1 visits today)