இலங்கையில் மொழிக் கொள்கையை முறையாக அமுலாக்கினால் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவு தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் தென்னிலங்கையில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் மொழிப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழகங்கள் முதலான உயர் கல்விக் கூடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் அந்நிய மொழிகளை கற்பது உசிதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச கருமமொழிக் கொள்கை அமுலாக்கப்படும் விதம் மென்மேலும் சிறப்பாக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 21 times, 1 visits today)