தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. லெனோவோவின் மோட்டோரோலா வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கவரை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் பதிவு செய்திருக்கும் காப்புரிமை விண்ணப்பத்தில் அந்நிறுவனம் ஹின்ஜ் பகுதியில் சிறிய டிஸ்ப்ளே உள்பட மூன்று ஸ்கிரீன்களை பயன்படுத்தும் சாதனத்திற்கான காப்புரிமையை கோரியிருப்பது தெரியவந்துள்ளது.

டட்சு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் சர்வதேச காப்புரிமை மையம் மோட்டோரோலாவிற்கு மடிக்கக்கூடிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்குவதற்கான காப்புரிமைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் அகலமான செவ்வக டிஸ்ப்ளே மடிக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போன் போன்றும், மடிக்கப்படாத நிலையில் டேப்லெட் போன்றும் வேலை செய்யும் என தெரியவந்துள்ளது.

மேலும் இதன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் ஹின்ஜ் அருகில் சுருட்டி வைக்கக்கூடியதாகவும்ஸ இதன் டிஸ்ப்ளேவை பாதுகாக்கவும்இ போனின் ஸ்டேன்ட் போன்று வேலை செய்யவும் கவர் ஒன்றும் வழங்கப்படுவது காப்புரிமையில் தெரியவந்துள்ளது. இந்த கவர் புதிய சாதனத்தின் வயர்லெஸ் சார்ஜர் போன்றும் வேலை செய்யலாம் என கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் ட்விட்டரில் வெளியானது. இதில் ஸ்மார்ட்போனினை இரண்டு பக்கமும் மடிக்க முடியும் என்றும் இதில் இரண்டு பிரைமரி டிஸப்ளேக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவை ஸ்மார்ட்போன் திறந்தால் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் மூன்றாவது டிஸ்ப்ளே ஹின்ஜ் பகுதியில் வழங்கப்படுகிறது.

நவம்பர் 9இ 2016-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதற்கான காப்புரிமையை பதிவு செய்திருக்கிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன் உண்மையில் உருவாக்கப்படுகிறதா அல்லது கான்செப்ட் வடிவில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் அறிவிப்பின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

(Visited 18 times, 1 visits today)