சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க வின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை ​பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி திஸ்ஸசிரி சுகத்தபால ஆகிய இருவருக்குமே மேற்படி விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)