இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும், 522 ஏக்கர் அரச , தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியார் காணிகளில் இருந்து வெளியேறும் இராணுவத்தை, மற்றுமொரு இடத்திற்கு மாற்றுவதற்காக 866 மில்லியன் ரூபாவை ஒதுக்க ஊடக மற்றும் நிதி அமைச்சர மங்கள சமரவீரவும், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைவாக, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, முகாம்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வரும் காணி உரிமையாளர்களை மீண்டும் அந்த இடங்களில் குடியமர்த்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

(Visited 39 times, 1 visits today)