ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து விட்டு, அண்மையில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன, தாம் அரசாங்கத்தில் இருந்து விலகிய போதும், கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கோத்தாபய ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே ஜோன் செனிவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 22 times, 1 visits today)