உலகம் முழுதும் இன்று கொண்டாடப்படும் அன்னையா் தினத்தை கூகுள் டூடுள் வெளியிட்டு பெருமை படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் இன்று அன்னையா் தினம் பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. “அம்மா” இந்த உலகின் புனிதமான வாா்த்தைகளில் முதன்மையானதாக கருதப்படும் வாா்த்தை அம்மா. நான் காணும் தெய்வம்  என்முன் வாழும் தெய்வம்  உலகின் அப்பழுக்கற்ற உறவு என்று அனைவரும் போற்றுவது நம் அன்னையை தான்.

இவ்வாறான புனிதமான உறவை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அன்னையா் தினத்தை கூகுள் டூடுள் வெளியிட்டு கொண்டாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையா் தினமாக கொண்டாடப்படும் நிலையில் தலைவா்கள் பலரும் அன்னையா் தின வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.

(Visited 16 times, 1 visits today)