பதுளையை வசிப்பிடமாக கொண்ட 7 வயது சிறுமியான அமானி ராயிதா என்னும் சிறுமியின் ஆசையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்திக்க தனது பெற்றோருடன் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காத்திருந்தார். இதனை அறிந்துக்கொண்ட ஜனாதிபதி வேலைப்பளுவுக்கு மத்தியிலும், தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி குறித்த சிறுமியை அழைத்து வந்துள்ளார்.

இதன்போது, இந்த சிறுமி தன்னால் வரையப்பட்ட ஓவியத்தை ஜனாதிபதிக்கு  பரிசளித்து விட்டு, ஜனாதிபதி பதுளைக்கு விஜயம் செய்யும் போது, தனது வீட்டுக்கு வருமாறு அன்பான வேண்டுகோளையும் விடுத்துச் சென்றுள்ளார்.

இதன்படி, நேற்று(28) பதுளைக்கு விஜயம் செய்திருந்தப் போது, ஜனாதிபதி குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்று, பாட்டுப் பாடி அங்கு கூடியிருந்த ஏனைய சிறுவர்களையும் மகிழ்வித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 20 times, 1 visits today)