இலங்கையில் மே தினம் 7 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சில பகுதிகளில் மே தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இதற்கமைய “மே தினத்தைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்கள்” ஏற்பாடு செய்திருந்த மே தினக் கொண்டாட்டம் இன்று காலை கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இதன்போது மே தின கொண்டாட்டங்களை பிற்போட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், தமது கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவண்ணம் மே தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

(Visited 37 times, 1 visits today)