ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் ரசித் கானின் பந்தில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் விளாசினார்.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய கே எல் ராகுல் 18 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க வீரரன கிறிஸ் கெய்ல் கடைசி வரை களத்தில் நின்று 63 பந்துகளில் 104 ரன்களை விளாசினார்.

11 சிக்ஸர்கள்:
இந்த போட்டியில் கெய்ல் மொத்தம் 11 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி 104 ரன்களை குவித்தார்.

ஐதராபாத்தின் ரசித் கான் 14வது ஓவரை வீசினார். அதில் 2வது பந்து முதல் 5வது பந்து வரை தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசினார்.

அதில் மூன்று சிக்ஸர்கள் நேராகவும், கடைசி சிக்ஸர் லெக் சைடிலும் அடித்து அசத்தினார்.

(Visited 37 times, 1 visits today)