யாஹூ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மரிசா மேயர் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யாஹூ (YAHOO) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மரிசா மேயர். இவர் கூகுள் நிறுவனத்திலும் துணைத் தலைவராக இருந்தவர். கூகுளில் 13 ஆண்டுகள் பணியாற்றிவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குத் தாவினார். அப்போது, அவர் PB&J என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பார்ச்சூன் (Fortune Magazine) பத்திரிகை 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் 100 வலிமை மிக்க பெண்கள் பட்டியலில் மரிசாவுக்கு முதலிடத்தைக் கொடுத்தது.

புகழின் உச்சத்தைத் தொட்ட அவர் திடீரென்று யாஹூவில் வகித் பதவியிலிருந்து விலகி தனது கணவருடன் ஜாலியாக நாட்களைக் கழித்தார். இந்நிலையில், மரிசா மேயர் தன் ட்விட்டர் பக்கத்தில் தான் தொடங்க உள்ள புதிய நிறுவனம் பற்றி அறிவித்துள்ளார். தொழில் முனைவோரை குறிவைத்து புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

 

(Visited 25 times, 1 visits today)