யாரை திருமணம் செய்து கொண்டாலும் அந்தப் பெண்ணுடன் 2 வருடம் கண்டிப்பாக சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் நடிகர் ஆர்யா.

நடிகர் ஆர்யா நடித்து வரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. நமது கலாச்சாரத்துக்கு அப்பாற்பட்டு இதெல்லாம் சாத்தியமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து அண்மையில் கூட சில பிரபலங்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்..

அதோடு இதே போல ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளில் திருமண ஆசை காட்டி கடைசியில் செய்துகொள்ளவில்லை என சர்ச்சையும் எழுந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிசன் ஒன்று ஒப்பந்தமாகியுள்ளது. அதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம். இந்த ஒப்பந்தத்தை ஏற்று நடிகர் ஆர்யாவும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 91 times, 1 visits today)