பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று லண்டன் நகரில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் புத்தாண்டு சடங்கில் கலந்துகொண்டார்.

பிரித்தானியாவின் பிரதான சங்கநாயக்கர், லண்டன் பௌத்த விகாரையின் விகாராதிபதி வண. போகொட சீலவிமல நாயக்க தேரர் இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சம்பிரதாய முறைப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வாதம் வழங்கினார்.

அதன் பின்னர் விகாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

(Visited 29 times, 1 visits today)