பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் நகரில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் ராணி எலிசபெத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளில் 30 வயதுக்கும் குறைவானவர்கள் 2.4 பில்லியன் பேர் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இளவரசர் ஹாரி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் இயற்கை சவால்களை சந்திக்கும் வகையில் இளம் சமூகத்தினரை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

33 வயதான ஹாரி அமெரிக்க நடிகையான மார்க்லேவை அடுத்த மாதம் 19ஆம் திகதி திருமணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 17 times, 1 visits today)