இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்தின் காஷா பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப்பாதைகள் அமைத்து அதன் வழியாக வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அத்தகைய சுரங்க பாதைகளை இஸ்ரேல் அழித்து வருகிறது. சுரங்க பாதைகளை கண்டுபிடிக்க அதிநவீன சிறப்பு ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் காஷா எல்லையில் மிக நீளமான சுரங்கப்பாதை கண்டிபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

ஹமாஸ் தீவிரவாதிகளால் தோண்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை பல கி.மீட்டர் நீளம் கொண்டது. வடக்கு காஷாவில் உள்ள ஜாலியாவில் தொடங்கி இஸ்ரேலின் நகாஸ் ஆஸ் நோக்கி தோண்டப்பட்டிருந்தது. இச்சுரங்கப் பணி முடிவடைவதற்குள் அது கண்டறியப்பட்டது.

இந்த சுரங்கம் தோண்டும் பணி 2014-ம் ஆண்டு காஷா போரின்போது நடைபெற்றுள்ளது. இத்தகைய 30 சுரங்கப் பாதைகள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ மந்திரி அவிக்தார் லைபர்மேன் தெரிவித்தார். சமீப காலங்களில் 5 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

(Visited 46 times, 1 visits today)