ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

“வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் இலங்கை படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு தொடக்கம், ஆண்டு தோறும் குறைந்தது 2.5 மில்லியன் டொலர் வருமானம் பெறப்படுகிறது.

இதுவரை இராணுவத்தைச் சேர்ந்த, 18,179 படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றியுள்ளனர்.

தற்போது, லெபனான், தென்சூடான்., மாலி, அபேயி, நியூயோர்க், மத்திய ஆபிரிக்க குடியரசு, மேற்கு சகாரா, உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையினர் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

(Visited 20 times, 1 visits today)