கொழும்பில் மூடப்பட்டிருந்த அமெரிக்க மையம் (American Center) நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க செனெட்டில் வரவுசெலவுத் திட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அமெரிக்காவின் பெரும்பாலான அரசு சேவைகள் முடங்கியிருந்தன.

இதனால் கொழும்பில் உள்ள அமெரிக்க மையமும், மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, இடைக்கால நிதி ஒதுக்கீட்டுக்கு செனெட் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையிலேயே, கொழும்பில் உள்ள அமெரிக்க மையமும் மீளச் செயற்படத் தொடங்கியுள்ளது.

(Visited 52 times, 1 visits today)