11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 9-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன. பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. 2-வது போட்டியில் பஞ்சாபை வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது.

மொகாலியில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மும்பையையும், அடுத்த போட்டியில் கொல்கத்தாவையும் வீழ்த்தி இருந்தது. காயம் காரணமாக ரெய்னா இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார். அவர் இடத்தில் முரளி விஜய் இடம் பெறலாம். காயம் அடைந்த முரளி விஜய் முழு உடல் தகுதி பெற்று விட்டாரா? என்பதில் உறுதி இல்லை.

பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. சென்னையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

(Visited 30 times, 1 visits today)