தமிழ்ப்புத்தாண்டு தினம் இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதிய கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினியும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “போராட்டமே வாழ்க்கையாகி விட்டது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழர்கள் போராடி வரும் சூழ்நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகி விட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
(Visited 25 times, 1 visits today)