புதிய அமைச்சர்கள் 4 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் தற்காலிகமாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன் அடிப்படையில், சரத் அமுனுகம – திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்,ரஞ்சித் சியம்பலாபிடிய – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்,பைசர் முஸ்தபா – விளையாட்டுத்துறை அமைச்சர்,மலிக் சமரவிக்ரம – சமூக வலுவூட்டல், நலன்புரி, கண்டி மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்.

இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் ஒரு புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

(Visited 180 times, 1 visits today)