சென்னையில் நாளை மறுதினம் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாக வெளியான தகவலுக்கு சென்னை அணியின் சி.இ.ஓ. மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் நேற்று மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தியது. இதையடுத்து வருகிற 10-ம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தப்பட்டால் சென்னை மைதானம் அருகில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இதனிடையே, சென்னையில் நாளை மறுதினம் நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிட்டபட்டு வருவதாகவும், அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது சென்னை அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த செய்திக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஒ. மறுப்பு தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி நாளை மறுதினம் சென்னையில் போட்டி நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)