ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது க்ரோம் சேவையில் க்ரிப்டோகரென்சி மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

கூகுள் க்ரோம் இணைய திட்ட விதிமுறைகளில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் இவை மைனிங் செய்யும் ஒற்றை பணியை மட்டும் செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்த விவரம் பயனருக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூகுள் சார்பில் விதிமுறை விதிக்கப்பட்டு இருந்தது.

”மைனிங் செய்யக்கூடிய ஸ்க்ரிப்ட்களை கொண்டிருக்கும் சுமார் 90 சதவிகித எக்ஸ்டென்ஷென்கள் வேலை செய்யாமல் போனது. இவற்றை க்ரோம் வெப் ஸ்டோரில் அப்லோடு செய்வதில் செவலப்பர்களின் முயற்சி பலனளிக்காமல் போனது. க்ரிப்டோகரென்சி மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷென்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டும், ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது,” என எக்ஸ்டென்ஷன்ஸ் பிரிவு மேளாலர் ஜேம்ஸ் வேக்னர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”இன்று முதல் க்ரோம் வெப் ஸ்டோரில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் எக்ஸ்டென்ஷன்கள் வேலை செய்யாது,” என அவர் தெரிவித்திருக்கிறார். தற்சமயம் செயல்பட்டு வரும் மைனிங் எக்ஸ்டென்ஷன்கள் அனைத்தும் ஜூன் மாத வாக்கில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

மைனிங் தவிர பிளாக்செயின் சார்ந்த எக்ஸ்டென்ஷன்கள் அனைத்தும் க்ரோம் வெப் ஸ்டோரில் அனுமதிக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பல்வேறு விதங்களில் பலன் அளிக்கும் எக்ஸ்டென்ஷன்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் ஸ்க்ரிப்ட்கள் (குறியீடுகள்) இடம்பெற்றிருப்பதும் இவை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பின்னணியில் வேலை செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்ற மைனிங் எக்ஸ்டென்ஷன் சார்ந்த ஸ்க்ரிப்ட்கள் பயனருக்கு தெரியாமல் சிபியு பயன்படுத்தும் என்பதால் சாதனத்தின் செய்லபாடு பாதிக்கப்படுவதோடு, அதிகளவு மின்சக்தியை பயன்படுத்தும்.
”கூகுளின் புதிய முடிவு க்ரோம் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து பயனர்களுக்கு பாதுகாப்பான சேவையை தொடர்ந்து வழங்கும்,” என வேக்னர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக க்ரிப்டோகரென்சி சார்ந்த விளம்பரங்கள் ட்விட்டர் வலைத்தளத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் அறிவித்தது. இதே போன்று ஜனவரி மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும் தனது வலைத்தளத்தில் க்ரிப்டோகரென்சிக்களை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 41 times, 1 visits today)