ரஜினி நடித்து வரும் ‘2.0’ படத்தில் உபயோகித்த பொருட்கள் மற்றும் டி&சர்ட் ஆகியவற்றை விற்பனை செய்யவுள்ளது லைகா நிறுவனம்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் போன்ற மாபெரும் நடிகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘2.0’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று லைகா நிறுவனம் ஒரு புதிய விளம்பர யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது ‘2.0’ படத்தில் உபயோகித்த பொருட்களை, டீ ஷர்ட் ஆகியவற்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்முலம் ரசிகர்கள் கவரப்படுவார்கள் என நம்புகிறது லைகா நிறுவனம். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி தீபாவளிக்கு படத்தை வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது.

(Visited 34 times, 1 visits today)