இந்தியாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவும் ஒரு அங்கமாக இணைந்துக்கொள்ளவுள்ளார்.

அதாவது ஐ.பி.எல். தொலைக்காட்சி மற்றும் ஊடக உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்படி இன்று ஆரம்பிக்கும் ஐ.பி.எல். தொடர் ஸ்டார் இந்தியாவின் அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

இந்நிலையில் இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான வர்ணனையாளர்களை ஸ்டார் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இதில் இலங்கை அணியின் குமார் சங்கக்காரவும் இணைந்துள்ளார்.

அவருடன் கெவின் பீட்டர்சன், மைக்கல் வோஹ்ன் மற்றும் நசீர் ஹுசைனும் வர்ணனையாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் குமார் சங்கக்காரா ஐ.பி.எல். தொடரின் வர்ணனையாளராக செயற்படவுள்ளமை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 84 times, 1 visits today)