நடிகை சுஷ்மிதா சென் தனது இளைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாலிவுட் நடிகையும், தொழில் அதிபருமான சுஷ்மிதா சென் திருமணம் செய்து கொள்ளவில்லை. ரினி, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ரினிக்கு நடிகையாகும் ஆசை இருக்கிறது. ஆனால் படித்து முடித்த பிறகே நடிக்க செல்ல வேண்டும் என்று சுஷ்மிதா கறாராக தெரிவித்துவிட்டார். இளைய மகள் அலிஷா அம்மாவுடன் சேர்ந்து ஜிம் செல்வது, ஜிம்னாஸ்டிக் செய்வதுமாக உள்ளார். இந்நிலையில் சுஷ்மிதா அலிஷாவை கட்டிப்பிடித்தபோது அதை ரினி புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை சுஷ்மிதா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தாயும், மகளும் பாசத்தோடு இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

(Visited 110 times, 1 visits today)