ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவருக்கு டப்பிங் பேசும் சவீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

எந்திரன், `2.0′ ஆகிய இரு படங்களையும் தொடர்புபடுத்தும் கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால், வௌியீட்டுத் திகதி தள்ளிப்போயுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 108 times, 1 visits today)