சென்னை: காண்டம் விளம்பரம் குறித்து நடிகை காஜல் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் காண்டம் ஒளிபரப்பு குறித்து கருத்து தெரவித்துள்ளார்.

காண்டம் விளம்பரங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் வழக்குகளால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

இதன்படி தொலைக்காட்சி சேனல்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. குழந்தைகள் பார்க்க தகுதியற்றவை என்பதால் இரவு நேரத்தில் ஒளிரபரப்புவது சரியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது பற்றி சமீபத்தில் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காஜல் அகர்வால்,’ இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த காண்டம் விளம்பரத்தை அதிகம் ஒளிபரப்ப வேண்டும். அதை பார்த்தாவது சிலர் குழந்தை உற்பத்தியை நிறுத்த வாய்ப்புண்டு” என்றார்.

(Visited 53 times, 1 visits today)