இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீட்டு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

துபாய் பிரதமர், சேக் முகமதுபின் ரசீது அல் மக்தூமின் மகள் சேகா லத்தீபா. இளவரசியான இவர், குதிரையேற்றம், மலையேற்றம், பாரா கிளைடர், செயற்கை இறக்கைகளை கட்டிக் கொண்டு வானில் பறப்பது போன்ற சாகச விளையாட்டுகளில் ஆர்வமுடையவர்.

சுதந்திரமாக வாழ ஆசைப்பட்ட இளவரசி சேகா லத்தீபாவுக்கு, தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க பிடிக்கவில்லை. அதனால் கடந்த 4ஆம் தேதி, இளவரசி லத்தீபா தனது நண்பர் ஹெர்வ் ஜாபர்ட் உதவியுடன் நோஸ்ட் ரோமோ என்கிற படகில் ஏறிக் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.

துபாய் இளவரசி இந்திய கடல்பகுதியில் இருப்பதை தெரிந்து கொண்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர் அவரை மீட்க முயற்சிகள் மேற்கொண்டனர். அந்தவகையில் இளவரசியின் படகை கோவா அருகே மடக்கி பிடித்தனர். அதன்பின்னர் இளவரசி சேகா லத்தீபாவும், அவர் நண்பர் ஹெர்வ் ஜாபர்ட்டையும் மீட்டு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஒரு இளவரசியே நாடு விட்டு நாடு ஓடி வந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

(Visited 89 times, 1 visits today)