வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ பயண வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு பயன்பாட்டிற்கு, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இதையடுத்து ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளை, விண்ணில் தகுந்த சுற்றுவட்டப் பாதையில் ஜி.எஸ்.எல்.வி எம்கே-II நிலைநிறுத்தியது.

இந்நிலையில் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவால் படம்பிடிக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ 1.41 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் கவுண்டவுன் முடிந்து புறப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

ராக்கெட்டின் மூன்று பகுதிகள் படிப்படியாக பிரிந்து, விண்வெளியில் சென்று நிலைநிறுத்தப்படுவது வரை வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

வீடியோவை பார்க்க, இங்கே கிளிக் செய்யவும்.

(Visited 48 times, 1 visits today)