ரஷ்யாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள உலக கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.

இந்த வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இதனை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

18 கரட் தங்கத்திலான 1.4 கிலோகிறாம் எடையைக்கொண்ட இந்த வெற்றிக்கிண்ணத்தை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை (24) காலை 9.00 மணி முதல்; உலக வெற்றிக் கிண்ணம் விளையாட்டு ரசிகர்கள் பார்வையிட முடியும். இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

உலக கால்பந்தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்று இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்

உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக் கிண்ணத்தை ஆறு கண்டங்களைச் சேர்ந்த 51 நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு ரசிகர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும்.

(Visited 42 times, 1 visits today)