அனைத்துலகத் தமிழர் பேரவைதமிழர் இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் சேர்க்கப்பட்ட கையெழுத்துக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அனைத்துலகத் தமிழர் பேரவை தமிழர் இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் வழக்கறிஞர்களிடம் மாபெரும் கையெழுத்து இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.

சென்னையில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற கையெழுத்து இயக்கத்தில் கட்சிகள், அமைப்புகளைக் கடந்து பெரும் திரளாக ஒன்றிணைந்து வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 75 times, 1 visits today)