இலங்கையின் முன்னேற்றத்திற்கான கால இடைவெளி ஏமாற்றம் தரும் விதத்தில் தாமதமாக காணப்படுவதாகவும் அதிகளவு பணிகள் செய்யப்பட வேண்டி இருக்கின்றன என்றும் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்திருக்கிறார்.

புதன்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்ற விவாதம் ஒன்றில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்றக்குழுவின் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மார்க் பீல்ட் பதிலளிக்கையில்;

“இலங்கைக்கான பிரிட்டனின் செய்தி தீர்க்கமானதாக தொடர்ந்து இருந்து வருகின்றது.  பயங்கரமான யுத்தகாலத்திற்குப் பின்னர் நன்னம்பிக்கை அடிப்படையில் அளித்திருந்த சகல உறுதிப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நெருக்கமான பங்காளி என்ற முறையியிலும் அத்துடன் நண்பர் என்ற ரீதியிலும் இலங்கை அரசாங்கம் நிலைமாற்று நீதி தொடர்பாக துரிதமான முன்னேற்றத்தை மேலும் எட்டுவதற்கு தொடர்ந்து ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்குவோம். கடந்த அக்டோபரில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் மாரப்பனவை நான் சந்தித்திருந்தேன். நான்கு நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்துவதையிட்டு ஊக்குவிப்பு அடைந்துள்ளோம். அவற்றை ஒன்றுபட்டு அமுல்படுத்தினால் ஸ்திரமான தன்மையும் வளர்ச்சியும் சகல இலங்கையர்களுக்கும்

நீண்ட கால சுபீட்சமும் உறுதிப்படுத்தப்படுவதாக அமையும்.

அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் ஊடாக அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வை வழங்குதல், நிலைமாற்று நீதிக்கான நம்பகரமான பொறிமுறைகளைஏற்படுத்துதல்,  தற்போதும் இராணுவம் வசம் இருக்கும் தனியார் காணிகளை உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்குதல் ஆகியவையே அந்த விடயங்களாகும்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக மனித உரிமைகளுக்கு அமைவான சட்டமூலத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக இலங்கை இதுவரை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவில்லை. அந்த விடயங்களில் உண்மையான முன்னேற்றத்தை இலங்கை எட்டவேண்டுமென அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்’ என்று மார்க் கீல்ட் கூறியுள்ளார்.

அதேவேளை நீதிப்பொறிமுறை தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறித்து கருத்து தெரிவித்த மார்க் பீல்ட் கவலையளிக்கும் விதத்தில் சிறியளவு, முன்னேற்றமே அந்த விடயம் தொடர்பாக ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த வாரம் தீர்மானம் 34/1இன் முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கின்றது. ஜெனீவாவில் மசினோடியா, மென்டிநீக்கிரோ, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இணை அனுசரணையாளர்களின் சார்பில் பிரிட்டன் அறிக்கை ஒன்றுக்கு தலைமை தாங்கவுள்ளது.

இலங்கையின் முன்னேற்றத்தை அந்த அறிக்கை மீளாய்வு செய்வதாக அமையும். இலங்கையின் உறுதிப்பாடுகள் மற்றும் இற்றைப்படுத்தப்பட் அறிக்கை என்பன தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரினால் அறிக்கை வெளியிடப்படவிருக்கின்றது

( அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டிருக்கிறார்). இங்கு இணை அனுசரணையாளர்களின் அறிக்கையை முன்கூட்டியே வெளியிடுவது பொருத்தமானதல்ல.ஆனால் இலங்கை 2015 இல் இருந்ததிலும் பார்க்க இப்போது பாதுகாப்பானதாகவும் சுதந்திரமானதாகவும் இருக்கின்றது.

இரண்டாவதாக ஆக்கபூர்வமான வகையில் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் செயற்படுகின்றது. மூன்றாவதாக நீண்ட கால நிலையான நல்லிணக்கத்தை நோக்கி மேம்பாடு காண்பதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது என்பவையே அறிக்கையில் உள்ள விடயங்களாகும்.

அதேவேளை முன்னேற்றத்திற்கான கால இடைவெளி ஏமாற்றம் தரும் விதத்தில் மெத்தனப்போக்கை கொண்டதாக அமைந்திருக்கிறது. இதில் நிலைமாற்று நீதி பொறிமுறைகளை அமுல்படுத்துதல்இ உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பன முக்கியமான அங்கமாக விளங்குகின்றன.

அதேவேளை ஜிஎஸ்பி பிளஸ் விடயம் தொடர்பாகவும் நான் எடுத்துக்கூறவுள்ளேன்.உறுப்பினர்கள் தெரிவித்திருந்த விடயங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். ஜிஎஸ்.பி பிளஸை பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு பாதிப்பையும் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க நாங்கள் இதுவரை விரும்பியிருக்கவில்லை.அது சகலரினதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைப்பாடாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

(Visited 43 times, 1 visits today)