இலங்கையில் நீதிக்கான உறுதிப்பாடுகள் நிறைவேற்றப்படும் வரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தேவைப்படுகின்றது என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.

பேரவையில் அமுலாக்கலின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் அடிக்கடி பேசுகின்றோம். சகல தீர்மானங்களையும் நாங்கள் விரும்பியவாறு எம்மால் தீர்மானிக்க முடியும். ஆனால்இ களத்திலுள்ள மக்களுக்காக உண்மையான முன்னேற்றத்தை அது ஏற்படுத்துவதில்லை.

2015 அக்டோபர் 30/1 தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. அச்சமயம் நம்பிக்கை வாய்ப்பு என்பனவற்றைக்கொண்டதாக அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி மற்றும் பதிலளிக்கும் கடப்பாட்டு எதிர்பார்ப்பையும் தீர்மானம் தோற்றுவித்திருந்தது. அத்துடன் நிலைமாற்று நீதி பொறிமுறைகள் 4 ஐ ஏற்படுத்துவதாக இலங்கை உறுதியளித்திருந்தது.

நீதி, நல்லிணக்கம் , மனித உரிமைகள் ஆகியவற்றை நாட்டில் மேம்படுத்த இந்த பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையும் உள்ளடங்கியிருந்தது. சர்வதேச நீதிபதிகள்  விசாரணையாளர்களை சம்பந்தப்படுத்தியும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை காணாமல் போனோர் அலுவலகம்  இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பனவே அந்த 4 பொறிமுறைகளும் ஆகும்.

இதுவரை காணாமல் போனோர் அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதுவும் ஜெனீவாவில் தற்போது இடம்பெறும் அமர்வுக்கு முன்பாகவே அது அமைக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய 3 உறுதியளிக்கப்பட்ட பொறிமுறைகள் தொடர்பாகவும் சிறிய முன்னேற்றமே காணப்படுகின்றது. அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றியிருக்கவில்லை.

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றப்போவதாக உறுதியளித்திருந்தது. கடந்த வருடம் இலங்கைக்கு மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் விஜயம் செய்திருந்தார். பாதுகாப்புத் துறையில் சித்திரவதையை பயன்படுத்துதல் ஆழமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

நிலைமாற்று நீதி பொறிமுறைகள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் கலந்துரையாடல்களை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் செயலணி பிரிவு நடத்தியிருந்தது. 2017 ஜனவரியில்இ தனது அறிக்கையை அந்தச் செயலணிப் பிரிவு வெளியிட்டிருந்தது.

பாதுகாப்புத் துறை உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களிடமிருந்தும் விபரமான பரிந்துரைகளை அந்த அறிக்கை கொண்டிருந்தது. முன்னோக்கி செல்வதற்கு முக்கியமான வழிமுறையொன்றை அந்த அறிக்கை வழங்கியிருந்தது.

ஆனால் அது கிடப்பில் இருந்து வருகிறது. திரும்பவும் இழக்கப்பட்ட ஒரு வாய்ப்பை கொண்டதாகவே அது காணப்படுகின்றது. அவ நம்பிக்கையே ஏற்பட்டிருக்கின்றது.

தலைவர் அவர்களே! நாம் வெற்றிகரமான கதை ஒன்றைக் கொண்டதாக இலங்கை இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இலங்கை வெற்றிகரமான கதையுடன் இருப்பதற்கான தேவை எம் யாவருக்கும் உள்ளது. ஆனால் அரசியல் நோக்கத்தின் பெயரால் மனித உரிமைகள் ஓரங்கட்டப்படுமானால் பேரவைக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக நெருக்கடியாக இது உருவாகுவதுடன் அதிருப்தி மற்றும் விரக்தியான நிலைமைக்கு உரமூட்டுவதாக அமைந்துவிடும்.

அத்துடன ஏனைய விவகாரங்களில் பேரவை கவனத்தை நகர்த்துமானால் நீதிக்கான உறுதிமொழி நிறைவேற்றப்படாமலேயே தொடர்ந்திருக்கும் இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இந்த சபைக்கு அளித்த உறுதிமொழிகளை அமுல்படுத்துவதற்கு காலவரையறையுடன் கூடிய திட்டமொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கையின் உறுதிப்பாடுகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை பேரவை இலங்கை மீது கண்காணிப்பை பேணுவதற்கான தேவைப்பாடு உள்ளது. இந்நிலையில்இ அரசாங்கம் கடந்த கால விடயங்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆதரவை வழங்கும் சர்வதேச சமூகத்தின் விருப்பத்திலேயே இலங்கையின் நீண்ட கால சமாதானமும் ஸ்திரத் தன்மையும் ஊசலாடுகின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 42 times, 1 visits today)