பிரதமரின் தலைமையில் அமைக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ குழுவை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவைக் கலைத்துவிட்டு குறித்த குழுவின் நடவடிக்கைகளை அமைச்சரவைக்கு பொறுப்பளிக்குமாறும் ஜனாதிபதி குறித்த அமைச்சரவைப் பத்திரத்தினூடாக கேட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

(Visited 20 times, 1 visits today)